Monday, September 10, 2018

முடி வளரவும் முடி கொட்டாமல் இருக்கவும் சில டிப்ஸ்


தினமும் படுக்கும் முன் இரவில் எண்ணெய்  தேய்த்தால்  முடி உதிராது

தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும்.

படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும் இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது.

ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.

அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், கூந்தலை வளர்ச்சியடையும்.

கூந்தலானது நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.

நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மடித்து கட்டி  கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.

மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.

நரை முடி தோன்றி விட்டது என்று கவலை வேண்டாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நரை முடியை கருமையாக்கலாம்


வணக்கம் நண்பர்களே!

நாம் தினந்தோறும் சின்னத்திரை நட்சத்திரங்களின் பல்வேறு விதமான படங்களை பல்வேறு வகையான Angle-களில் பார்த்து ரசித்து வருகின்றோம். நம்முடைய சேனலை இதுவரை பின்பற்றாதவர்கள் பதிவிற்கு கீழே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பின்பற்றலாம்.


Third party image reference

Third party image reference
நரை முடி தோன்றி விட்டது என்று கவலை வேண்டாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நரை முடியை கருமையாக்கலாம்.நம் வீட்டில் கிடைக்கும் வெங்காயத்தை வைத்தே இந்த நரை முடிக்கு தீர்வு காணலாம். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் இருப்பதைப் போன்றே அழகுபடுத்தும் விஷயங்களுக்கும் இது தீர்வாக அமைகின்றது.


Third party image reference

Third party image reference
வழிமுறை :1

தேவையான பொருட்கள்:

01. ஒரு மேசைக் கரண்டி வெங்காயச் சாறு

02. ஒரு லீட்டர் கொதித்தாறிய தண்ணீர்

செய்முறை:2

தண்ணீருடன் வெங்காயச் சாறை ஊற்றவும். இந்தக் கலவையை நீங்கள் குளித்து முடித்த பின்பு தலையில் ஊற்றிக் கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடைவ இவ்வாறு செய்தல் வேண்டும். வெங்காய மணம் அடுத்த முறை ஷhம்பு போடும் வரை தலையில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


Third party image reference
வழி முறை:2

தேவையான பொருட்கள்:

01. ஒரு வெங்காயம்02. பிளென்டர்03. வடிதட்டு

செய்முறை:2

வெங்காயத்தை கழுவி அதன் தோலை உரித்துக் கொள்ளவும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதனை பிளென்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்தச் சாற்றை எடுத்து தலையின் ஓட்டில் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் 30 – 45 நிமிடங்கள் வரை வைத்திருந்து ஷhம்பு போட்டு கழுவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்வது நல்லது ஆகும்.



அதனுடைய செய்திகளை கண்டு கழிந்தபின் உங்கள் மனதில் தோன்றுவதை கீழே காமண்ட் மூலம் தெரிவிக்கவும்.மேலும் செய்திகளுக்கு எங்களுடன் இணைதிருங்கள்..