Friday, May 18, 2018

முலை கட்டிய தானிய வகைகளை உட்கொண்டு வந்தால் நம் உடல் எவ்வித அதிசயங்களை நிகழ்த்தும் என்று பார்க்கலாம்

வணக்கம் நண்பர்களே. நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் தலைப்பு முலை கட்டிய தானிய வகைகளை உட்கொண்டு வந்தால் நம் உடல் எவ்வித அதிசயங்களை நிகழ்த்தும் என்று பார்க்கலாம்.நாம் அனைவரும் அறிந்ததே இயற்கை உணவு வகைகள்,காய்கறிகள்,மற்றும் தானிய வகைகளை உட்கொண்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் தானிய வகைகளை முளை கட்டி சாப்பிட்டால் அதைவிட 100 மடங்கு பயன்களை தருகிறது.


முளைக்கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைப்பதையே முறை கட்டுதல் என்கிறோம்.

பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. மணற்புல் (Alfalfa), முள்ளங்கி, ப்ராக்கோலி, தீவனப்புல் (Clover) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை முளைக்கட்டும் போது, அவற்றிலிருந்து கிடைக்கும் சில தாவர சத்துக்கள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கின்றன. வேகமாக ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானிங்களால் மூப்படையும் வேகம் மட்டுப்படும் என்பதை நம்ப முடிகிறதா? இது உண்மை தான்.
முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளைக்கட்டப்பட்ட தானியங்களே. பச்சைப் பருப்பு, பெங்கால் பருப்பு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், காய வைத்த பட்டாணிகள் ஆகியவை நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தானிய வகைகள் தான். பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய முறையில் முளைக்கட்டப்பட்ட தானியங்களை பயன்படுத்தியும் வருகிறோம். மணற்புல் விதைகளில் முளைக்கட்டப்படும் போது, அவை மாங்கனீசு, வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, கே மற்றும் பிற முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன.
இங்கு அத்தகைய முளைக்கட்டிய தானியங்களின் அற்புதமான சில ஆரோக்கிய பலன்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


பல வகையான பயன்கள்

முளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாகவும் முளை கட்டிய தானியங்கள் உள்ளன.

அனைத்து நாள்களும் கிடைக்கும்

கறி மற்றும் பழங்கள் போன்ற புரதச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளைப் போலல்லாமல், முறை கட்டிய தானியங்கள் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. இவற்றை வீட்டிலேயே தயாரிப்பதால், செலவும் குறைவு என்பது தான் முக்கியமான விஷயம்.

சக்தியை அதிகரிக்கும்

முளைக் கட்டுவது என்பது ஒரு விதமான வாழ்வின் தொடக்க நிலையாகும், இதன் மூலம் தானியங்களில் மறைந்திருக்கும் சக்திகள் வெளிப்படுத்தப்பட்டு அவை உடலில் கலக்கின்றன. பாதாம் கொட்டைகளை முளைக்கட்டும் போது, அதில் உள்ள உடலுக்கு தேவைப்படும் சக்திக்காக கொழுப்பை எரிக்கும் லைபேஸ் என்ற என்சைம் உருவாக்கப்படுகிறது.


முக்கிய தாதுக்கள்

நமது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படும் வகையில், பல்வேறு வடிவங்களினாலான தாதுக்களை முளை கட்டிய தானியங்கள் கொண்டுள்ளன. முளை கட்டும் போது, அல்கலைன் தாதுக்களான கால்சியம், மக்னீசியம் ஆகியவை புரதங்களுடன் சேர்ந்து, செரிமானத்தின் போது உடலால் எளிதில் கிரகிக்கப் படுகின்றன.

அமினோ அமிலங்கள்

தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்ளை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.

பல மடங்கு விட்டமின்கள்

முளை கட்டுவதால் வைட்டமின்களின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


நார்ச்சத்து

எடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் நார்ச்சத்துக்களை முளை கட்டுவதால் அதிகரிக்க முடியும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.

புரதம்

பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவை முறை கட்டப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில் உள்ள சில அமினோ அமிலங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டமளிக்கின்றன.

என்சைம்கள்

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளன என்று அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ள முலை கட்டிய தானியங்களை உண்டு பயன்பெறுவோம்.

சளியை போக்க சுலபமான வழிகள்

இன்றைக்கு பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்கலாம் ஆனால் சளிக்கு மட்டும் மருந்தும் கிடையாது மாத்திரையும் கிடையாது ஏனென்றால் சளி எந்த வைரஸ் ஆல் உருவாகிறது என்பது கண்டுபிடிப்பது கடினம். எனவே வீட்டில் செய்ய கூடிய சில எளிமையான மருத்துவம்.

1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்து போய்விடும்.

2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியால் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் போய்விடும்.

3. சிறிதளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.

6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10. சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'உ' இருக்கிறது.வைட்டமின் 'உ' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

 13. சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். 14. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

15.ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.

மூட்டு வழியை நீக்கும் அதிசய பானம்

முதுமையடைந்த பின் வரும் மூட்டு வலி இப்போதெல்லாம் ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படுகிறது.

உடல் பருமன், உணவு பழக்கங்கள், கடுமையான உடற்பயிற்சி, தசை நார் காயங்கள், போன்றவை முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

வெறும் ஐந்தே நாட்களில் முழங்கால் மூட்டுக்களால் ஏற்படும் வலியை குறைக்க ஒரு அதிசய பானம், எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்

பானம் செய்யத் தேவையானவை

அன்னாசி பழ துண்டுகள் 2 கப்ஆரஞ்சு ஜூஸ் 1 கப்வேக வைத்த ஓட்ஸ் 1 கப்பாதாம் 2/12 டேபிள் ஸ்பூன்பட்டை தூள் 1 ஸ்பூன்தண்ணீர் 1 கப்

வேகவைத்த ஓட்ஸில் அன்னாசி பழ சாறை சேர்க்கவும், அதன் பின் அதில் பாதம் பருப்பை தட்டி சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.

அதன் பின் மிக்ஸியில் ஆரஞ்சு பழ சாறு, பட்டை பொடி , தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனோடு ஓட்ஸ் கலவையை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

இந்த பானத்தை ஐந்து நாட்கள் குடித்து வர மூட்டு வலிகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்க ஆரம்பிக்கும்.

இதனை தொடர்ந்து குடித்து வர மூட்டு வலி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மூட்டு வலி தீர மேலும் சில உணவு வகைகள்

காரட் சாறு: தினமும் காரட் சாறு ஒரு டம்ளருடன் எலுமிச்சை சாறை சேர்த்து அருந்தி வந்தால் கால்வலிகள் குணமாகும்.

வெந்தயம்: தினமும் இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலியில் நீரோடு சேர்த்து வெந்தயத்தையும் மென்று உண்டு வர முழங்கால் வலி சரியாகும்.

இஞ்சி மஞ்சள் தேநீர் : 3 கப் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சி பொடி , மஞ்சள் தூள் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பின் இந்த நீரை வடிகட்டி தேநீர் போல அருந்தி வர மூட்டுவலி காணாமல் போகும்.

வெங்காயம்: வெங்காயத்தில் உள்ள சல்பர் முழங்கால் மூட்டு வலிகளை குறைக்க பெருமளவு உதவி செய்கிறது. இதன் பைட்டோகெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. ஆகவே மூட்டு வலி உள்ளவர்கள் உணவுகளில் வெங்காயத்தை சேர்த்து கொள்ளலாம்.

கடுகு எண்ணெய்: இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய்யுடன் 5 பூண்டு பற்களை போட்டு வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால்களில் ஒத்தடம் கொடுத்து வர நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்: ஒரு கப் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் மேற்கண்டவாறு ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும் முழங்கால் வலி குணமாகும்.

மஞ்சள் மற்றும் பால்: ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் போட்டு அருந்தி வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்.

வெந்தய பசை: இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை பொடித்து சிறிது நீர் கலந்து பசை போலாக்கி அதனை வலியுள்ள முழங்காலில் தடவி வரலாம் இதன் மூலம் வலி குறையும்.

Thursday, May 17, 2018

உடற்பயிற்சி முன் பின் உணவுகள்

'க்சர்சைஸ் செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது' என ஒரு கருத்து இருக்கிறது. `இது உண்மைதான்’ என்கிறது மருத்துவம். தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப்போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடக் கூடாதவை, சாப்பிடவேண்டியவை, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுதர்சனா.

``வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்பவர்கள் என இரண்டு வகையினர் இருக்கிறார்கள். வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்கிறவர்களில் சிலர், சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஜிம்மில் வொர்க்-அவுட் செய்பவர்கள் சிலர் காலை எழுந்ததுமே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இவர்களெல்லாம் உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை. உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை. 

உடற்பயிற்சிக்கு முன்னர்...

சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே... 

* ஆப்பிள்
* ஆரஞ்சு
* பேரிக்காய்
* பப்பாளி
* பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி
* ஓட்ஸ்
* தயிர்
*கிரீன் டீ
* நட்ஸ்.

உடற்பயிற்சிக்குப் பின்னர்...

உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும். பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவர்கள், அவற்றுக்குப் பதிலாக

* தண்ணீர்
* இளநீர்
* வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
* வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

நேரத்தில் கவனம்!

* செரிமானத்துக்குப் பிறகுதான், தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்கும் என்பதால், 20 - 30 நிமிடங்களுக்குள் செரிமானம் ஆகக்கூடிய வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளவும். 

* உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். 

* உடற்பயிற்சி செய்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம், மிகவும் மதிப்புவாய்ந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் தசைகள் சத்துக்காகக் காத்திருக்கும். அப்போது சாப்பிடும் உணவு, நீங்கள் செய்த உடற்பயிற்சியை முழுமையாக்கி, உடல் வலிமைக்கு வலுசேர்க்கும். 

* உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்ளலாம். 

தண்ணீர் அவசியம்! 

* உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15 - 20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.

ஃபிட்னெஸுக்கான பொது அறிவுரைகள்...

* சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.

* முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.

* அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

* தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) உட்கொள்ளலாம்.

 

* முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்கு பதிலாக, உணவைப் பிரித்து 5  முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

* முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்துவிடுவதுமுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது’’ என்கிறார் சுதர்சனா. 

முகப்பருக்கள் வரக் கரணங்கள்

முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும்.

முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.மரபணுமாற்றங்கள் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். மேலும், ஜீன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பருக்கள், ஒரு சிலரின் முகத்துக்குத் தனி அழகைத் தருவதும் உண்டு.பாக்டீரியா தொற்றுகாற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும்.
இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம்.

ஹார்மோன் மாற்றம்

பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான்.

அதிக தூக்கம்

நீண்ட நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். மேலும், அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும். தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone) முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம்.

அழகுசாதனங்களின் பயன்பாடு

அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட் களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து, இயற்கையாக அழகு பெற, தினமும் முகத்துக்கு பயத்தமாவு, மஞ்சள் கலந்து பூசலாம்.

சில உணவுகள்

சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்க்ரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.

மாதூளை நன்மகைள் ஏராளம்

மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக தெரிய வந்துள்ளது.
மாதுளை ஜூஸில் பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கட்டிகளான, புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளது.
மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.
சர்க்கரை நோயாளிகள் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் மாதுளை பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.
மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும்.
மாதுளை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அளவை அதிகரிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.
மாதுளை ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும். மாதுளை ஜூஸில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும்.

3-மடங்கு விட்டமின்-C உள்ள சிவப்பு மிளகாய்

பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது பச்சை வண்ண குடமிளகாயைத் தான். அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று பார்க்கலாம்.
குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.
குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது.
தினமும் குடமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.
குடமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலிக்கு மிகவும் ஏற்றது. எலும்பு இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்கிறது.
குடமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
இதய நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது ரத்த ஓட்டம் தடைபடுகிறது. குடமிளகாயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதில் கெட்ட கொழுப்பு இல்லை.
சிகப்பு குடமிளகாயில் மூன்று மடங்கு வைட்டமின் சி அதிகம். இது உடைந்த திசுக்களை சரி செய்யவும், ஆரோக்கியமான பிரசவ காலத்திற்கும், கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.
குடமிளகாய் ரத்தத்தை நீர்க்க செய்து விடும். இது அறுவை சிகிச்சையின் போது பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
குடமிளகாய் குழந்தைகளின் மிருதுவான சருமம் மீது பட்டால் எரிச்சல், தடிப்பு, சருமம் சிவப்பாதல், அலர்ஜி போன்றவை ஏற்படும். குழந்தைகளுக்கு குடமிளகாய் சேர்க்காமல் இருப்பதே நல்லது.