இன்றைக்கு பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்கலாம் ஆனால் சளிக்கு மட்டும் மருந்தும் கிடையாது மாத்திரையும் கிடையாது ஏனென்றால் சளி எந்த வைரஸ் ஆல் உருவாகிறது என்பது கண்டுபிடிப்பது கடினம். எனவே வீட்டில் செய்ய கூடிய சில எளிமையான மருத்துவம்.
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்து போய்விடும்.
2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியால் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் போய்விடும்.
3. சிறிதளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
4. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10. சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'உ' இருக்கிறது.வைட்டமின் 'உ' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.
11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். 14. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
15.ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.
No comments:
Post a Comment